CPM சட்டமன்ற உறுப்பினர்கள் தோழர் சின்னதுரை மற்றும் தோழர் நாகை மாலி ஆகியோருடன் பொது செயலாளர்

03 Sep 2021

இன்று #உரிமைகுரல்ஓட்டுநர்_தொழிற்சங்கம் சார்பாக ஓட்டுநர்களின் பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்றத்தில் பேச வேண்டியும் ஏற்கனவே கால் டாக்ஸி களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த தற்காக நன்றி தெரிவித்தும்

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சட்டமன்ற உறுப்பினர்கள்  தோழர் சின்னதுரை மற்றும் தோழர் நாகை மாலி ஆகியோரை

சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.ஜாஹிர் ஹுசைன் மற்றும் தென் சென்னை இணை செயலாளர் திருவான்மியூர் ரமேஷ் சிறு ரக சரக்கு பிரிவு வாகன நிர்வாகி மலைச்சாமி ஆகியோர்

நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்து கோரிக்கைகள் குறித்து விரிவான விளக்கம் அளித்தனர்

நிச்சயமாக தோழர் சின்னத்துரை அவர்கள் நான் கொண்டுவந்துள்ள கால்டாக்சி  கட்டண நிர்ணயம் தொடர்பான சிறப்பு தீர்மானம் நிச்சயம் தங்களுக்கு பயனளிக்கும் என்று  ஆறுதல் அளித்தார் மற்ற கோரிக்கைகள் குறித்தும் வாய்ப்புகள் கிடைக்கும் போது நிச்சயமா சட்டமன்றத்தில் பேசுகிறோம் என்று வாக்குறுதி அளித்தார்கள்

Youtube Link :