உயர்திரு சிற்றரசு அண்ணன் அவர்களுடன் பொது செயலாளர்
இன்று #உரிமைகுரல்ஓட்டுநர்_தொழிற்சங்கம் சார்பாக ஓட்டுநர்களின் பல்வேறு கோரிக்கைகளை
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வாயிலாக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு நமது கோரிக்கைகளை கொண்டு சென்று நிறைவேற்றி தர வேண்டி
சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.ஜாஹிர் ஹுசைன் மற்றும் தென் சென்னை இணை செயலாளர் திருவான்மியூர் ரமேஷ் சிறு ரக சரக்கு பிரிவு வாகன நிர்வாகி மலைச்சாமி ஆகியோர்
திராவிட முன்னேற்ற கழகத்தின் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளரும் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உதவியாளரும் ஆகிய உயர்திரு சிற்றரசு அண்ணன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்து கோரிக்கைகள் குறித்து விரிவான விளக்கம் அளித்தனர்
அண்ணன் சிற்றரசு அவர்களிடம் ஏற்கனவே பொதுச் செயலாளர் கோரிக்கைகள் குறித்து அண்ணன் சிற்றரசு அவர்களிடம் தொலைபேசியில் பேசி இருந்த காரணத்தினால் கோரிக்கை யின் தன்மையை முழுமையாக அறிந்திருந்த அண்ணன் சிற்றரசு அவர்கள்
இன்று ஒரு திருமண வரவேற்பில் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் கலந்து கொண்ட போது உங்கள் கோரிக்கை குறித்து அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் பேசி விட்டேன் உங்கள் கோரிக்கை கடிதம் கிடைக்கப் பெற்றவுடன் முழுமையான தகவல்களை அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கேட்டுள்ளதாகவும் கூறினார்
மேலும் வருகின்ற 06.09.2021 அன்று போக்குவரத்து துறை ஆணையர் தலைமையில் நடைபெற இருக்கின்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உங்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் இந்தப் பேச்சுவார்த்தையில் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்துவார்கள் அதற்கு நான் முழு பொறுப்பு என்று நமக்கு நம்பிக்கை அளித்தார்
அமைந்திருக்கின்ற இந்த அரசு தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசாக என்றும் செயல்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்