இந்திய பொதுவுடமை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மாரிமுத்து அவர்களுடன் பொது செயலாளர்
03 Sep 2021
இன்று #உரிமைகுரல்ஓட்டுநர்_தொழிற்சங்கம் சார்பாக ஓட்டுநர்களின் பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்றத்தில் பேச வேண்டி
இந்திய பொதுவுடமை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மாரிமுத்து அவர்களை
சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.ஜாஹிர் ஹுசைன் மற்றும் தென் சென்னை இணை செயலாளர் திருவான்மியூர் ரமேஷ் சிறு ரக சரக்கு பிரிவு வாகன நிர்வாகி மலைச்சாமி ஆகியோர்
நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்து கோரிக்கைகள் குறித்து விரிவான விளக்கம் அளித்தனர் நிச்சயமாக இது குறித்து இந்திய பொதுவுடமைக் கட்சி தொழிலாளர்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுக்கும் என்று வாக்குறுதி அளித்தார்