20.07.2021 அன்று தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் #சிவிகணேசன்_அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தின் பணிகள் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் சங்கம் சார்பில் அஸ்லாம் கான் மற்றும் அரியலூர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டணர்
20.07.2021 அன்று தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் #சிவிகணேசன்_அவர்கள் தலைமையில் நடைபெற்ற
அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தின் பணிகள் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில்
#உரிமைகுரல்ஓட்டுநர்_தொழிற்சங்கம்
சார்பாக மாநில செயற்குழு உறுப்பினர்கள் தென் சென்னை
அஸ்லாம் கான் மற்றும் அரியலூர்
அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டு
1. நல வாரியத்தில் இணையும் உறுப்பினர்களுக்கு விரைந்து அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்
2. விபத்தில் மரணம் அல்லது நிரந்தர ஊனம் அடையும் தொழிலாளர்களுக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்
3. தொழிலாளர் நல வாரியத்தில் இணையும் உறுப்பினர்களுக்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு போன்ற தொழிலாளர்களுக்கு என்று தனி மருத்துவ காப்பீடு உருவாக்கப்பட வேண்டும்
4. ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுனர்கள் கொரோனா இரண்டாவது அலை காரணத்தினால் விதிக்கப்பட்ட ஊர் அடங்கினால் ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுனர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே அவர்களுக்கு இஎம்ஐ கட்டுவதற்கு தமிழக அரசு கால அவகாசம் வழங்க வேண்டும் மற்றும் கட்டுப்பாடின்றி செயல்படும் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும்
ஆகிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்
நமது உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளின் கருத்தையும் இதர தொழிற் சங்க நிர்வாகிகளின் கருத்தையும் பொறுமையாக கேட்டு அறிந்த அமைச்சர் அவர்கள்
ஆன்லைனில் பதிவு செய்வதில் ஏற்படும் தாமதம் அடுத்த பதினைந்து தினங்களில் சரி செய்யப்படும் என்றும்
இதர கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் வாக்குறுதி அளித்தார்