மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் அவர்களுடன் தலைவர் பொது செயலாளர் சந்திப்பு
06.07.2021 இன்று மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் அவர்களை
#உரிமைகுரல்ஓட்டுநர்_தொழிற்சங்கத்தின் காப்பாளர் அல்ஹாஜ் பஷீர் அஹமது (மாநில தலைவர் இந்திய தேசிய லீக்) அவர்களின் ஏற்பாட்டில்
சங்கத்தின் மாநில தலைவர் இ.சே.சுடர் வேந்தன்B.Tech., மற்றும் பொதுச் செயலாளர் அ.ஜாஹிர் ஹுசைன் ஆகியோர்
நேரில் சந்தித்து ஓட்டுநர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்தும் கடந்த 02.07.2021 அன்று நடைபெற்ற போராட்டத்தில் 8 ஓட்டுநர்கள் மீது போடப்பட்ட வழக்கை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைது மனு அளித்தோம்
நமது கோரிக்கைகளை நிதானமாகவும் பொறுமையாகவும் கேட்டறிந்த மாண்புமிகு அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் விரைவில் கால் டாக்ஸி களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் ஓலா, உபேர் நிறுவனங்கள் முறைபடுத்தபடும் இது சம்பந்தமாக இன்று கூட (நம்மை சந்திப்பதற்கு முன்பாக) அமைச்சர் அவர்கள் போக்குவரத்து துறை ஆணையர் உடன் ஆலோசனை நடத்தியதாகவும் தெரியப்படுத்தினார்
மற்ற கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார் சந்திப்புக்கு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த சங்கத்தின் காப்பாளர் அல்ஹாஜ் பஷீர் அஹமது அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.