நம்மவர் தொழிற்சங்க பேரவை துவக்க விழாவில் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் இ.சே.சுடர்வேந்தன் பொதுச் செயலாளர் அ.ஜாஹிர் ஹுசைன்
மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் திரு. சு.ஆ.பொன்னுசாமி அவர்களின் தலைமையில் 15.07.2021 அன்று காலை 11.00மணியளவில்
உதயமானது
மக்கள் நீதி மய்யத்தின் தலைமை தொழிற்சங்கமான
நம்மவர் தொழிற்சங்க பேரவை.
துவக்க விழாவில்
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின்
மாநில தலைவர் இ.சே.சுடர்வேந்தன்
பொதுச் செயலாளர்
அ.ஜாஹிர் ஹுசைன்
தென் சென்னை மாவட்ட செயலாளர் (ஆட்டோ பிரிவு)
V.சுதாகர்
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்திற்கு துவக்க விழாவில் நம்மவர் உயர்திரு பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள் பொற்கரங்களால் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் உறுப்பினர் மாற்றுத்திறனாளியான ஆட்டோ ஓட்டுநர் வேல் முருகன் அவர்களுக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி நலத்திட்ட உதவி வழங்கினார் உயர் திரு பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள்
அதனைத் தொடர்ந்து கர்ம வீரர் காமராஜர் 119வது பிறந்த நாளை முன்னிட்டு 119நலிவடைந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வாக ஐந்து குடும்பத்தினருக்கு தொழிற்சங்க பேரவை துவக்க விழா மேடையில் உதவிப் பொருள்களை வழங்கினார்.
நிகழ்வில் தென்சென்னை மாவட்ட ஆட்டோ பிரிவுச் செயலாளர் V.சுதாகர், வடசென்னை மாவட்ட ஆட்டோ பிரிவு செயலாளர் அருண் பிரசாத் திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ பிரிவுச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்ட
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் ஆட்டோ ஓட்டுனர்கள்
நல திட்ட உதவிகளை பெற்றுக்கொண்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்
உயர்திரு பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கும்
நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில தலைவர்
சு.ஆ.பொன்னுசாமி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து வாழ்த்தினர்