
உறுப்பினராக இணைய வேண்டுமா?
Click Here
இ.சே சுடர் வேந்தன்
- மாநில தலைவர்

அ . ஜாஹீர் ஹூசைன்
- பொது செயலாளர்

URIMAI KURAL DRIVERS TRADE UNION
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் குறிக்கோள்கள்
1. தொழிலாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ள உறவை முறைப்படுத்துவது
2. அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தொழிலாளர்களுக்கு உதவி செய்வது
3. தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் பணி முறைகளை பாதுகாப்பது
4. தொழிலாளர்களின் குறைகளை போக்க நடவடிக்கை எடுப்பது
5. தொழிலாளர்கள் உடல்நலம் பாதிக்கப்படும் போதும் விபத்து ஏற்படும் போதும் மரணம் ஏற்படும் போதும் அவர்களின் சிரமத்தை போக்க நிவாரண நடவடிக்கை எடுப்பது
6. தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் ஏற்படும் தகராறுகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பது
7. தொழிலாளர்களின் சமூக மற்றும் அரசியல் எண்ணங்களை ஊக்கப்படுத்துவது
8. மேற்கூறிய குறிக்கோள்களை உடைய மற்றும் இதர தொழிலாளர் அமைப்புகளோடு ஒத்துழைப்பதும் கூட்டாக செயலாற்றுவதும்
9. உறுப்பினர்களின் சாதி, மதம், இனம் மற்றும் மொழி வேறுபாடின்றி அவர்களின் நலனுக்காக பாடுபடுவது
10. ஓட்டுனர்கள் அனைவரையும் நலவாரியத்தில் இணைத்து நல வாரிய பயன்களை பெற்றுக் கொடுப்பது
உறுப்பினராக இணைய
தமிழகம் முழுவதுமுள்ள கார், ஆட்டோ, மேக்ஸி கேப், சிறு ரக சரக்கு வாகனங்கள் ஆகியவற்றை இயக்கும் ஓட்டுநர்கள் அனைவரும் அவ்வப்போது இயற்றப்படும் சங்கத்தின் சட்ட திட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த சங்கத்தில் உறுப்பினராக இணையலாம்
ஒவ்வொரு உறுப்பினரும் சங்கத்தின் ஆண்டு சந்தா 120 ரூபாய் செலுத்தி சங்கத்தில் உறுப்பினராக இணைந்து கொள்ளலாம்
ஒவ்வொரு ஆண்டும் முன்னதாக சந்தா செலுத்தி புதுப்பித்துக் கொள்ளாதவர் சங்கத்தில் உறுப்பினர் பதவியை இழப்பார்
சந்தாவும், நன்கொடையும் சங்கத்தின் பொது நிதியாகும் இந்த பொது நிதி தொழிற்சங்க விதி பிரிவு 15 கூறப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மட்டுமே செலவிடப்படும்
உறுப்பினர்களிடம் இருந்து பெறப்படும் சந்தாவும், நன்கொடையும் சங்கத்தின் பொது நிதியாகும் எந்த காரணத்தை கொண்டும் திருப்பி தரபடமாட்டாது.
...